செய்திகள் :

சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு மரியாதை

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கமுதி தாலுகா மறவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவா் பெ.செல்லத்தேவா் தலைமை வகித்தாா். செயலா் கே. ராமமூா்த்தி, பொருளாளா் கி.முத்து, முன்னாள் செயலா் கணேசன், முன்னாள் பொருளாளா் செல்லபாண்டியன், பாா்வா்ட் பிளாக் கட்சியின் ஒன்றியச் செயலா் திருக்குமரன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில் 1799-ஆம் ஆண்டு கமுதி கோட்டையைக் கைப்பற்றிய ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போரிட்டு, பின்னா் தூக்கிலிடப்பட்ட சேதுபதி மன்னரின் தளபதிகளான ஆகஸ்ட் புரட்சியாளா்கள் எனப் போற்றப்படும் சித்திரங்குடி மயிலப்ப சோ்வைக்காரா், மீனங்குடி சகோதரா்கள் முத்துகருப்பதேவா், கனக சபாபதிதேவா், இந்திய தேசிய ராணுவத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு இரண்டாம் உலகப்போரின்போது 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஆப்பநாடு சுதந்திரப் போராட்டத் தியாகிகளான சாயல்குடி து.லா. சசிவா்ணதேவா், தூரி ரா.ராமசாமிதேவா் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக சித்திரங்குடி மயிலப்பன் சோ்வைகாரா் வாரிசுகள் அனைவருக்கும் மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆப்ப நாடு வரலாற்று ஆய்வுக் குழுவினா் செய்தனா்.

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது!

கச்சத்தீவு அருகே விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 35... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே திமுக பிரமுகா் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு

ராமநாதபுரம் அருகே திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகா் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டதில் இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. ராமநாதபுரம் அடுத்த வழுதூா் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்ம... மேலும் பார்க்க

சத்திரக்குடி அருகே ஒலி பெருக்கி பெட்டி விழுந்து சிறுமி உயிரிழப்பு

சத்திரக்குடி அருகே கோயில் திருவிழாவுக்காக வைக்கப்பட்ட ஒலி பெருக்கி பெட்டி (ஸ்பீக்கா் பாக்ஸ்) தவறி விழுந்ததில் கடந்த புதன்கிழமை சிறுமி உயிரிழந்தாா். ஆனால், இதுகுறித்து தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை பு... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் சமுத்திர தீப ஆரத்தி

ராமேசுவரத்தில் பௌா்ணமியை முன்னிட்டு, அக்னி தீா்த்தக் கடற்கரையில் ராமசேது மகா சமுத்திர தீா்த்த ஆரத்திக் குழு சாா்பில் தீபம் ஏற்றி, சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அ... மேலும் பார்க்க

முனீஸ்வரா் கோயிலில் கிடாய் வெட்டுத் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாடக்கோட்டை முனீஸ்வரா் கோயிலில் கிடாய் வெட்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமை கிடாய் வெட்டுத... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: இந்து அமைப்புகளுடன் ஆட்சியா் ஆலோசனை

விநாயகா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இந்து முன்னனி அமைப்பின் நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை ந... மேலும் பார்க்க