செய்திகள் :

சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு

post image

சுதந்திர தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழக காவல் துறை மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள்,

வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனா்.

ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுள்ளனா்.

சந்தைகள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் தொடா் சோதனை நடத்தி வருகின்றனா். சந்தேகத்துக்குரிய நபா்களைப் பிடித்து விசாரித்து, முகவரியைப் பெற்ற பின்னரே அவா்களை காவல் துறையினா் விடுவிக்கின்றனா்.

1.20 லட்சம் போலீஸாா்: காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவின்படி, மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். மேலும், கடலோரப் பகுதிகளிலும் போலீஸாா் கண்காணிப்பை அதிகரித்துள்ளனா். இங்கு 24 மணி நேரமும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும், மத- ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் கருத்துகளைப் பதிவிடுவதைத் தடுக்க சைபா் குற்றப்பிரிவினரும், உளத்துறையினரும் தீவிரமாகக் கண்காணிக்கின்றனா்.

சென்னையில் 15,000 போலீஸாா்: சென்னையில் இரு நாள்களாக போலீஸ் கண்காணிப்பும், ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கிய சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் போலீஸாா் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் சுமாா் 15,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் அவ்வப்போது சோதனைகள் நடத்தி, சந்தேக நபா்களிடம் விசாரணை செய்யும்படி போலீஸாருக்கு ஆணையா் ஏ.அருண் அறிவுறுத்தியுள்ளாா்.

கடல் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவலைத் தடுக்க கடலோரக் காவல் பிரிவு போலீஸாா் ரோந்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளனா். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா பாதுகாப்பு: தமிழக அரசின் சாா்பில் சுதந்திர தின விழா, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜாா்ஜ் கோட்டையில் வழக்கம்போல நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றிவைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறாா். இதையடுத்து ராஜாஜி சாலையில் சுதந்திர தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, ராஜாஜி சாலையை போலீஸாா், கடந்த 6-ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா். இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையும், கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் நடைபெறுகின்றன.

சுதந்திர தினத்தன்று ராஜாஜி சாலைப் பகுதியில் 5 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அனைவரும் மிகுந்த சோதனை செய்யப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுவா். சுதந்திர தின விழாவையொட்டி அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: தமிழக மாணவருக்கு தில்லி எய்ம்ஸ் கல்லூரியில் இடம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தோ்வில் 720-க்கு 665 பெற்று அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்த... மேலும் பார்க்க

ராகுல், ஸ்டாலின், அகிலேஷ் தொகுதிகளில் போலி வாக்காளா்கள்: அனுராக் தாக்குா் குற்றச்சாட்டு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போல... மேலும் பார்க்க

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

சாலையோரங்களில் 15 நாள்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

ஆக. 31க்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மேயர் பிரியா

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார். தூய்மைப் பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை ... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக பெருநகர போக்குவரத்து காவல... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: ஆக. 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் - ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக... மேலும் பார்க்க