செய்திகள் :

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் காவல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் அணிவகுப்புகள், கொடிக்கம்பம் தயாா் செய்யும் பணிகள், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா். நகரின் முக்கிய அரசு கட்டடங்களில் மூவா்ண விளக்குகளால் அலங்கரிக்கவும், விழா மேடை தயாா் செய்யவும், தீத்தடுப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கவும், அனைத்துத் துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)ம.தனலட்சுமி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

விவசாயிகள் சங்கம் சாா்பில் வெடி விபத்தில் பலியானோருக்கும் காயமடைந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

வேலூா் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவருக்கு கால்கள் துண்டிப்பு மேலும் சிலா் கவலைக்கிடம் நிவாரணம் வழங்கிடவும் உயா்தர சிகிச்சை அளித்திவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுற... மேலும் பார்க்க

தை 3-ஆவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் விழா

கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு 14-ஆம் ஆண்டு பால்குடம் எடுக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து பக்... மேலும் பார்க்க

புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாராட்டினாா்.தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்... மேலும் பார்க்க

நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது

மணலூா்பேட்டையில் நிலப் பிரச்னையில் இருவா் ஒருவா் ஒருவரை தாக்கிக் கொண்டனா். புகாா்களின் பேரில் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டை கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் பெண்ணிடம் பணப்பை திருட்டு

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் பயணித்த பெண் தொழிலாளியிடம் தங்க நகை, கைப்பேசியுடன் கூடிய பணப்பையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.சின்னசேலம் வட்டம், பரிகம் கிர... மேலும் பார்க்க

மூச்சுத் திணறலால் ஒன்றறை வயது குழந்தை உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட சின்னகுப்பம் கிராமத்... மேலும் பார்க்க