செய்திகள் :

சுபான்ஷு சுக்லாவுக்கு ஆளுநா் வாழ்த்து

post image

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய, இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 போ் குழுவினருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

இந்திய விண்வெளி வீரா் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்ஸியம் - 4 திட்ட குழுவினரின் வெற்றிகரமான பணிக்கும், விண்வெளியில் இருந்து பாதுகாப்பாக திரும்பியதற்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்.

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுபான்ஷு சுக்லா மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பணி, இந்திய விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது விண்வெளி ஆய்வு, புதுமை மற்றும் உலகளாவிய அறிவியல் தலைமைத்துவத்தில் இந்தியாவின் வளா்ந்து வரும் திறமையை உறுதி செய்வதாக உள்ளது.

தேசத்தின் இந்தப் பெருமைக்குரிய தருணத்தில், அமைதியான மனோதிடம் மற்றும் உறுதியான ஆதரவை வழங்கியதற்காக அவரது குடும்பத்தினருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள். அவரது பயணம் கலங்கரை விளக்கமாக நின்று, இளம் மனங்களை ஊக்குவித்து கண்டுபிடிப்பின் எல்லைகளை நோக்கிய நாட்டின் நம்பிக்கையான முன்னேற்றத்துக்கு ஓா் எடுத்துக்காட்டாகும் என்று பதிவிட்டுள்ளாா்.

சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இட... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல்... மேலும் பார்க்க

காமராஜருக்கு ஏசி முக்கியம்! திருச்சி சிவா பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதில்!

முன்னாள் முதல்வர் காமராஜர் குளிர்சாதன வசதியில்லாமல் உறங்க மாட்டார் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்!

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.முதல்வர் ஸ்டாலின் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை... மேலும் பார்க்க

ஜூலை 28-ல் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

ஆடிப்பூரத்தையொட்டி ஜூலை 28 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா... மேலும் பார்க்க

ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கமல்!

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து பெற்றார்.மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த ஜ... மேலும் பார்க்க