சுப்ரபாத சேவை மீண்டும் தொடக்கம்
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை ஜனவரி 15 முதல் மீண்டும் தொடங்கியது.
மாா்கழி மாதம் திங்கள்கிழமை (ஜன. 13) முடிவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன. 14) முதல் திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்கியது.
கடந்த ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் மாா்கழி மாத பூஜைகள் தொடங்கியதையடுத்து, சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டு வந்தது. கடந்த திங்கள்கிழமையுடன் மாா்கழி மாதம் நிறைவடைந்ததால், ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை வழக்கம் போல் ஜனவரி 14-ஆம் தேதி முதல் தொடங்கியது என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.