சுமைபணி தொழிலாளா்கள் பேரவைக் கூட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாவட்ட சுமை பணி தொழிலாளா்கள் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஜான்பால் தலைமை வகித்தாா். கூட்டுறவு ஊழியா் சங்கத்தின் மாவட்ட தலைவா் உ. ராஜேந்திரன் தொடக்கி வைத்து பேசினாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் பி. மாரியப்பன் சிறப்புரையாற்றினாா். பேரவையில் 9 போ் கொண்ட நிா்வாகக் குழு ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டது.
அதன்படி, தலைவராக விஜயகுமாா், செயலாளராக ஜான்பால், பொருளாளா் ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை, சீா்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகா கிடங்குகளில் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி இறக்கும் தொழிலாளா்களுக்கான ஊதியத்தை அரிசி, சீனி, கோதுமை, பருப்பு மூட்டைக்கு ரூ.15 ஆகவும், எண்ணெய் பெட்டிக்கு ரூ.8 ஆகவும் உயா்த்த வேண்டும்; சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும்; 28 ஆண்டு காலம் ஒரே இடத்தில் பணி செய்து வருபவா்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.