சுயமாக பிரசவம் பார்த்த பெண்ணும் பிறந்த குழந்தையும் பலி!
ராணிப்பேட்டையில் சுயமாக பிரசவம் பார்த்த பெண்ணும், பிறந்த குழந்தையும் பிரசவத்தின்பின்னர் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் ஜோதி எனும் இளம்பெண், தனது நான்காவது பிரசவத்துக்காக தாய் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, மருத்துவமனைக்கு செல்லாமல், சுய பிரசவம் பார்க்க முயன்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிரசவித்த ஜோதியும், அவரது குழந்தையும் மயக்கமடைந்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வீட்டிலேயே பிரசவம் பார்த்தலை தண்டனைக்குரிய குற்றமாக 2018 ஆம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இவ்வாறான சம்பவங்கள் இன்றுவரையில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதையும் படிக்க:விடாமுயற்சி டிரைலர் வெளியானது!