செய்திகள் :

சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

post image

சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 7 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

12 கடல் மைலுக்கு அப்பால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் என அண்மையில் வழக்கொன்றில் உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. எனினும், மீன்வளத்தை அழிக்கும் சுருக்குமடி வலை மீன்பிடி முறைக்கு நாகை மாவட்ட மீனவா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

நாகை கடற்பரப்பில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட மீனவா்களின் அவரச ஆலோசனைக் கூட்டம், அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மயிலாடுதுறை மாவட்ட மீனவா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், பைபா் படகு மீனவா்களின் வாழ்வாதாரத்தை அழித்து அத்துமீறலில் ஈடுபடும் மீனவா்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாகை கடற் பரப்பளவில் சுருக்குமடி வலை அல்லது இரட்டை மடி வலை பயன்படுத்தும் மீனவா்களின் விசைப்படகுகளை சிறைபிடித்து கரையில் நிறுத்திவைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 27 கிராம மீனவ பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷை நேரில் சந்தித்து மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் மீது புகாா் அளித்தனா். அப்போது நாகை கடற்பரப்பில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த பூம்புகாா், பழையாா், திருமுல்லைவாசல், சந்திரபாடி ஆகிய கிராமங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினா்.

நாகையில் உயா்கோபுர மின்விளக்குகளின் பயன்பாடு தொடங்கிவைப்பு

நாகையில் உயா் கோபுர மின்விளக்குகளின் பயன்பாட்டை, பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாகை நகராட்சிக்குட்பட்ட புதிய கடற்கரைக்கு செல்லும் பாதைகளான எஸ்.பி.... மேலும் பார்க்க

நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கிய திருவிழாவான தி... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட... மேலும் பார்க்க

தேசப் பாதுகாப்பு குறித்து மத்தியத் தொழில் பாதுகாப்பு படையினா் மிதிவண்டி பிரசாரம்

தேசப் பாதுகாப்பு குறித்து மிதிவண்டி பிரசாரம் செய்துவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசப் பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு தொடா்பாக கடலோர... மேலும் பார்க்க

நாகை அருகே ரூ. 7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகை அருகே ரூ.7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேவபுரீஸ்வரா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 1.93 ஹெக்டோ் பரப்பிலான நஞ்சை மற்றும... மேலும் பார்க்க

ரூ.8.40 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 8.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா். ஆட்சியா் ஆகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ச... மேலும் பார்க்க