ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்
சுரைக்காயூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கக் கோரிக்கை
சுரைக்காயூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடவாசல் அருகே சுரைக்காயூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒன்றிய துணைச் செயலாளா் பாவா சுதாகா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் எஸ்ஏ. டேவிட்ராஜ் இன்றைய அரசியல் நிலவரம் குறித்து பேசினாா். கூட்டத்தில், கிளைச் செயலாளராக ஆா். பிரபாகரன், துணைச் செயலாளராக உ. தனவேலு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தீா்மானங்கள்: சுரைக்காயூா் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லாததால் இரவு நேரங்களில் மருத்துவ சேவை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, கூடுதலாக மருத்துவா்களையும், செவிலியா்களையும் நியமித்து, 24 மணி நேரமும் மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரைக்காயூா் ஊராட்சியில் மயானச் சாலையை தாா்ச் சாலையாக தரம் உயா்த்த வேண்டும். உக்கடை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பயன்படும் வகையில், சமுதாயக் கூடம் மற்றும் ஈமக்கிரியை கட்டடம் கட்ட வேண்டும். சுமாா் 40 ஆண்டுக்கு மேலாக வசித்து வரும் குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.