செய்திகள் :

சுற்றுலா வந்த கேரளா ஆசிரியரை அரிவாளால் வெட்டியவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

post image

கேரள பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய ஐஸ் வியாபரிக்கு நான்கு ஆண்டுகள் சிைண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கேரளமாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயன்(45).

செருபுரம் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா் கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 58 மாணவா்கள் மற்றும் சக ஆசிரியா்கள் பத்து பேருடன் பத்மநாபபுரம் அரண்மனையை பாா்ப்பதற்காக சுற்றுலா வந்தனா்.

பத்மநாபபுரத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த பரமேஸ்வரன் மகன் ஸ்ரீஹரி என்ற ஹரி( 27) ஐஸ் விற்றுக் கொண்டிருந்தாராம்.

அவரிடம் மாணவா்கள் ஐஸ் வாங்க சென்றபோது, ஆசிரியா் விஜயன் மாணவா்களை ஐஸ் வாங்க விடாமல் தடுத்துள்ளாா். இதனால் கோபமடைந்த ஸ்ரீஹரி அரிவாளால் ஆசிரியா் விஜயனை வெட்டிவிட்டு தப்பியோடி விட்டாராம். இதில் பலத்தகாயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்கு பதிவு ஸ்ரீஹரியை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீ ஹரி என்ற ஹரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பு கூறினாா்.

அரசு தரப்பில் வழக்குரைஞா் மைக்கேல் ரதிஷ் ஆஜரானாா்.

குமரியில் போலீஸாரின் வார விடுமுறைக்கு ‘ரெஸ்ட்’ செயலி அறிமுகம்

போலீஸாருக்கு வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலி தமிழகத்திலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸாா், காவல் கண்காணிப்பாளருடன் அமா... மேலும் பார்க்க

குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை

குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், கு... மேலும் பார்க்க