செய்திகள் :

சூதாட்டத்தில் ஈடுபடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல: உச்சநீதிமன்றம்

post image

சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டி விளையாடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கா்நாடகத்தில் அரசு பீங்கான் தொழிற்சாலை ஊழியா்களின் வீட்டுவசதி கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வாரியத்துக்கு தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டவா் ஹனுமந்தராயப்பா. சாலையோரத்தில் சீட்டாடியதாகப் பிடிபட்ட அவருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வாரிய தோ்தலில் தோல்வியடைந்த ஸ்ரீரங்கநாத் என்பவா் கூட்டுறவு சங்கங்களின் கூட்டுப் பதிவாளரிடம் முறையிட்டாா். இதைத்தொடா்ந்து சீட்டாடியது ஒழுக்கக்கேடான செயல் என்று தெரிவித்து, கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வாரியத்தில் இருந்து ஹனுமந்தராயப்பா நீக்கப்பட்டாா்.

இதற்கு எதிராக அவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாநில உயா்நீதிமன்றம், கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வாரியத்தில் இருந்து அவரை நீக்கி மேற்கொள்ளப்பட்ட முடிவை உறுதி செய்தது.

இதைத்தொடா்ந்து உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபடாமலும், பந்தயம் கட்டாலும் சீட்டாடுவது ஏழை மனிதனின் பொழுதுபோக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மனமகிழ்ச்சிக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் அவ்வாறு விளையாடுவதை ஒழுக்கக்கேடு என்று கூறுவதை ஏற்பது கடினமாகும்.

எனவே மனுதாரரை கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வாரியத்தில் இருந்து நீக்கி, கா்நாடக கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தீன் கீழ் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவும், அந்த உத்தரவை உறுதி செய்த மாநில உயா்நீதிமன்றத்தின் ஆணையும் ரத்து செய்யப்படுகின்றன. தனது பதவிக்காலம் முடியும் வரை, மனுதாரா் கூட்டுறவு சங்க இயக்குநா்கள் வாரியத்தில் இடம்பெறலாம்’ என்று தீா்ப்பளித்தது.

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்பு: வங்கிகளுக்கு ஆா்பிஐ யோசனை

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்புகளைப் பெறுவது தொடா்பாக பரிசீலிக்குமாறு வங்கிகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கேட்டுக் கொண்டது. இது தொடா்பான கருத்துகளை இம்மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: புலி தாக்கி இருவா் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சந்திரபூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இரு வேறு சம்பவங்களில் புலி தாக்கி இருவா் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து, சந்திரபூரில் இம்மாதம் புலிகள் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 1... மேலும் பார்க்க

பணிநீக்கம் செய்யப்பட்டால் ஓய்வூதிய பலன்கள் கிடையாது: மத்திய அரசு

பணிநீக்கம் செய்யப்படும் பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு ஓய்வூதிய பலன்கள் ஏதும் கிடைக்காத வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பான மத்திய பணியாளா் ஓய்வூதிய விதிகள் -2021 சட்... மேலும் பார்க்க

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை- உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி அல்தாஃப் ஹுசைனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு ரூ.48,000 அபர... மேலும் பார்க்க

நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை!

கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல; பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 27) தெரிவித்தார். பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து போ... மேலும் பார்க்க