J&K Cloudburst: ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு; 40-க்கும் மேற்பட்டோர் இ...
சூப்பர் கோப்பை: முதல்முறையாக வென்று வரலாறு படைத்தது பிஎஸ்ஜி!
யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணி பெனால்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
இத்தாலியில் உள்ள ப்ளூஎனர்ஜி திடலில் யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணியும் டோட்டன்ஹாம் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் முதல் பாதியில் டோட்டன்ஹாம் அணி (39’) 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர், 48-ஆவது நிமிஷத்தில் இரண்டாவது கோல் அடித்து 2-0 என இருந்தது.
75 சதவிகித பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்த பிஎஸ்ஜி அணி எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியாமல் இருந்தது. கடைசி 10 நிமிஷத்தில் ஆட்டமே மாறியது.
போட்டியின் 85-ஆவது நிமிஷத்தில் பிஎஸ்ஜியின் லீ காங் கோல் அடிக்க, ஸ்டாபேஜ் டைமில் 90+3ஆவது நிமிஷத்தில் மீண்டும் பிஎஸ்ஜியின் கோன்சோலோ ராமோஸ் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினார்.
இதனால் ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது. இதில் பிஎஸ்ஜி அணி 4-3 என வெற்றி பெற்றது.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒரு கிளப் முதல்முறையாக யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.