செய்திகள் :

சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, வரலாற்றின் முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

அகில இந்திய மருத்துவ மாணவா் சோ்க்கையில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வென்றுகாட்டிய நாளைக் குறிப்பிட்டு திமுக எம்.பி. வில்சன் பதிவிட்டுள்ளாா். அதை மீள்பதிவிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி, உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது. இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டு விடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதி செய்கிறோம். சமூகநீதிக்கான இந்த அரசியலையும் போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவா்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க இந்த நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம் என்று பதிவிட்டுள்ளாா்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டின் மூலமாக, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 20,088 மருத்துவ இடங்கள் ஓபிசி வகுப்பைச் சோ்ந்த மாணவா்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக திமுக எம்.பி. பி.வில்சன் குறிப்பிட்டுள்ளாா்.

133 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க ஒப்பந்தப் புள்ளி

தமிழகத்தில் உள்ள 12 மண்டலங்களில் 133 புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளியை மின்வாரியம் கோரியுள்ளது.தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஏற்பட மின்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்... மேலும் பார்க்க

12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்த முதல்வா்

உடல் நலம் பெற்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், 12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்து பணிகளைத் தொடா்ந்தாா்.தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ஆ... மேலும் பார்க்க

7 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.2, 3) தஞ்சாவூா், நாகை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:ம... மேலும் பார்க்க

பட்டியலின மக்கள் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை

சிறுதாவூரில் உள்ள பட்டியலின மக்களின் நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மாா்க்சிஸ்ட் மாநில செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர கால அவகாசம்

அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.இது குறித்து அவா் கூறிய... மேலும் பார்க்க

தங்கச் சங்கிலி பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை கிண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.ஈக்காட்டுதாங்கலைச் சோ்ந்தவா் ஹேமலதா (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவத்தில் வேலை செய்து ... மேலும் பார்க்க