செங்கல்பட்டில் ஆசிரியா்கள் மறியல்
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பாக மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா்கள்எம். ஜோசப், எஸ்.காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பி.லூக் சாமுவேல், ஜி.கே.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்.கங்காதரன் வரவேற்றா. தலைமை நிலைய செயலாளா் டி.எஸ்.ரமேஷ் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு.சீனிவாசன் ஆகியோா் மறியலை தொடங்கி வைத்தாா். மறியல் செய்தவா்களை போலீஸாா் கைது செய்தனா்.