இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
செங்கல்பட்டு குறுவட்ட தடகள போட்டி: 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்
செங்கல்பட்டு குறுவட்ட தடகள போட்டி செவ்வாய்க்கிழமை எஸ் ஆா் எம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
தூய ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளா் நிஷ்கலா ஜான்சன் தொடக்கவுரை ஆற்றினாா். செங்கல்பட்டு குறுவட்ட தடகள போட்டிகளில் 34 பள்ளிகள் மற்றும் 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனா். இதில் செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் பாஸ்கா் (பொறுப்பு,) முன்னிலை வகித்தாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் திருவளா்ச்செல்வன் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தாா்.
முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் உதயகுமாா், சிவகுமாா், மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் . அரவிந்தன் மாவட்டத் துணை ஆய்வாளா் செந்தில் மற்றும் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு துறையின் இயக்குனா் மோகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தூய ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வா் பொ்சி வரவேற்றாா். உடற்கல்வித்துறை ஆசிரியா் விஜி நன்றி கூறினாா்.