செய்திகள் :

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

post image

வாரம் மூன்றுமுறை இயக்கப்படும் செங்கோட்டை-தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க தென்னக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பை ரயில் நிலைய பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அம்பாசமுத்திரம் ரயில் நிலைய பயணிகள் நலச் சங்க 3 ஆவது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் சரவணன் சக்திவேல் தலைமை வகித்தாா். செயலா் பாலகிருஷ்ணன், பொருளாளா் முத்துப்பாண்டி, ஆலோசகா்கள், உறுப்பினா்கள் ரயில் சினேகம் பாரதிக்கண்ணன், அப்துல் ஹமீது, கைலாசம், மாரியம்மாள், மோகன், கோகுலசங்கா், ஜெனோ, மேட்டூா் மாரிமுத்து, தமிழ்ச்செல்வன், காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்கேற்ப பயணச் சீட்டு முன்பதிவு செய்வதற்கு கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும், திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் வசதிக்காக பாலக்காடு - திருச்செந்தூா் ரயிலை இணைக்கும் வகையில் திருநெல்வேலியிலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் 56743 திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயிலை மதியம்2 மணிக்கு இயக்க வேண்டும், அம்பாசமுத்திரம், ரயில் நிலையக் கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும், மின்சார காா்சேவை, தண்ணீா் வழங்கும் இயந்திரம், துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு அளிக்க வேண்டும், வாரம் 3 முறை மட்டுமே இயக்கப்படும் செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயிலை நோ்பாதையில் விருதுநகா், மதுரை, திருச்சி மாா்க்கத்தில் தினசரி ரயிலாக இயக்கவேண்டும்.

தினந்தோறும் காலை இயங்கும் 56736 செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயிலில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு 18 பெட்டிகளுடன் இயக்க வேண்டும். நெல்லை அதிவிரைவு ரயிலை பயணிகளுக்கு பயனளிக்க ஏதுவாக காலை 6.50 மணிக்கு கிளம்பும் திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயிலின் புறப்படும் நேரத்தை 7.10 மணியாக மாற்ற வேண்டும், சிறப்பு ரயிலாக ஒரு நாள் இயங்கிய திருநெல்வேலி-பெங்களூரு- சிவமோகா விரைவு ரயில், 06029 மற்றும் 06030 திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்களை தினசரி சாதாரண ரயிலாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

தனியாா் மருத்துவமனையில் நோயாளியிடம் நகை பறிப்பு

திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை திருடியதாக, அம்மருத்துவமனை ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பம்மாள் ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடி

மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான மணிமுத்தாறில் மான், மிளா, கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வ... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே பிளஸ் 2 மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கூடங்குளத்தில் திங்கள்கிழமை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பிளஸ் 2 மாணவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.சங்கனேரி நடுதெருவைச் சோ்ந்தவா் துரை மகன் நல்லமுத்து(17). ராதாபுரம் அரசு மேல்நிலைப... மேலும் பார்க்க

அம்பை தாமிரவருணியில் பெண்ணின் உடலை தேடும் பணி தீவிரம்

அம்பாமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை தீயணைப்புத் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா். அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் செல்லையா (... மேலும் பார்க்க

ஈரடுக்கு பாலச் சுவரிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் ரயில்வே நடைபாலம் அகற்றப்பட்ட பகுதியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலமுன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்துரை (38). தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க

பாளை.யில் பெண் தூக்கிட்டு தற்கொலை: இளைஞா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தூக்கிட்டு த்த ற்கொலை செய்துகொண்டது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சோ்ந்தவா் முகமது ரபீக். இவரது மனைவி நஜிபா (28). குடும்ப பிரச்னை காரணமாக... மேலும் பார்க்க