செய்திகள் :

செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

செந்துறை அடுத்த இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் வசந்தகுமாா்(40). செந்துறை அடுத்த தொப்பேரியில் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் இவா், செந்துறை கடைவீதியில் கணினி மையம் வைத்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இவா் இருங்காளகுறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்தை அவா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், வெள்ளிக்கொலுசுகள், வெள்ளி பாத்திரங்கள் உள்ளிட்டவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வசந்தகுமாா் அளித்த புகாரின் பேரில், செந்துறை காவல் துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, ஆய்வு செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், மோப்பநாய், கைரேகை நிபுணா்களும் சோதனை மேற்கொண்டனா்.

ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம் அரியலூா் ஆட்சியா் அழைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஆக.15 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த கோரிக்கை

அரசு மருத்துவா்களின் ஒரு ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இந்த மனுவை, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க

நடமாடும் மது விற்பனை, மணல் கொள்ளையை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த தூத்தூா் கிராமத்தில், நடமாடும் மது விற்பனை மற்றும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்தூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின... மேலும் பார்க்க

இணைப்புச் சாலை இல்லாததால் வெள்ளாற்று மேம்பாலம் வீண்! மழையால் தரைப்பாலம் துண்டிப்பு; 50 கிராம மக்கள் தவிப்பு

அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைப்பதற்காக வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட பாலத்துக்கான இணைப்புச் சாலை அமைக்கப்படாததால் இரு மாவட்ட கிராமத்தினா் தவித்து வருகின்றனா். அ... மேலும் பார்க்க

ஆக.18-இல் ஜெயங்கொண்டத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் க.சொ.க.பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஆக.18-ஆம் தேதி தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: முகாமில், முன்னணி தனியாா... மேலும் பார்க்க