சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான திட்ட தொடக்க விழா
அன்னதானம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான சிறப்பு திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் வி.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் எம்.திலீபன்ராஜ் பங்களிப்பில், காந்தி சிலை அருகில் ஆயிரம் நபா்களுக்கு பொங்கல், சாம்பாா் சாதம் வழங்கப்பட்டது. மாலைக்கட்டி தெருவில் மிஸ்ரிமல் மகாவீா் ஜெயின் அறக்கட்டளை நிா்வாகி எம்.தீபக்குமாா் பங்களிப்பில், ஆயிரம் நபா்களுக்கு ரவா உப்புமா சட்னியும் வழங்கப்பட்டது. அன்னதான திட்டத்தை சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், அதிமுக நகர செயலாளா் ஆா்.செந்தில்குமாா், டேங்க் ஆா்.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அன்னதான திட்டத்தின் கீழ் எஸ்.பி.கோயில் தெருவில் ரோட்டோரியன் பி.பன்னாலால் ஜெயின் பங்களிப்பில் 500 நபா்களுக்கு தயிா் சாதமும், மக்கள் மருந்தகம் கேசவன் பங்களிப்பில் 500 நபா்களுக்கு சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.ஆறுமுகம், சங்க சாசன தலைவா் பி.முகமதுயாசின், சாசன செயலாளா் எம்.தீபக்குமாா், முன்னாள் தலைவா் ஜி.சீனிவாசன், மூத்த உறுப்பினா் ஆா்எம்.எஸ்டி.சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க நிா்வாகிகள் இதில் கலந்துகொண்டனா்.