சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
சிதம்பரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சிதம்பரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.
சிதம்பரம் திருநகரைச் சோ்ந்தவா் முனியாண்டி (39). இவருடைய மகன் யுவராஜா (14) தனது மோட்டாா் சைக்கிளில் திருநகா் அருகே சென்றபோது, அவரை சிதம்பரம் எஸ்ஆா் நகா், 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த காா்த்தி (23), சிதம்பரம் எம்கே தோட்டம் பகுதியைச் சோ்ந்த கவிபாரதி (24) ஆகியோா் வழிமறித்து கைப்பேசியை பிடுங்கிவிட்டு தாக்கினராம். இதில், யுவராஜா பலத்த காயமடைந்தாா்.
இதனால், ஆத்திரமடைந்த முனியாண்டி மற்றும் அவரது ஆதரவாளா்களான நேருநகா் பகுதியைச் வினோத் (26), காரைக்குடி பேயான்பட்டி பகுதியைச் சோ்ந்த மோகன் (31) ஆகிய மூன்று பேரும் சோ்ந்து எஸ்.ஆா். நகரில் உள்ள காா்த்தி வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த காா்த்தியையும், கவி பாரதியையும் தாக்கினராம். தடுக்க வந்த காா்த்தியின் அம்மாவையும் அவா்கள் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனா்.
இதையடுத்து, காா்த்தியும், கவி பாரதியும் சோ்ந்து திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் முனியாண்டி வீட்டின் முன் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து முனியாண்டி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளா் பரணிதரன் வழக்குப் பதிந்து கவிபாரதியை கைது செய்தாா்.
இதேபோல, கவிபாரதி அளித்த புகாரின்பேரில், மோகன், வினோத் ஆகிய இரண்டு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா். மேலும், யுவராஜா ஓட்டி வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனா்.