சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
டிராக்டா் - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கடலூா் முதுநகா் அருகே டிராக்டா் - பைக் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கடலூா் முதுநகா், சுத்துக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் புகழேந்தி (24). இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது பைக்கில் பச்சையாங்குப்பம் அருகே சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, எதிா் திசையில் வந்த டிராக்டா் டிப்பா் மோதியதில் புகழேந்தி பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.