செய்திகள் :

சென்னை: ஆபாச பதிவு.. பெண்ணுக்கு காதல் டார்ச்சர் கொடுத்த நீச்சல் பயிற்சியாளர் கைது

post image

சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நீச்சல் பயற்சியாளர் பாலாஜி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக நாங்கள் இருவரும் பழகிவந்தநிலையில் பாலாஜி, என்னைக் காதலிப்பதாகக் கூறினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால் என்னுடைய பெயரில் சமூகவலைதளங்களில் போலி கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் ஆபாச போட்டோஸ்களை பதிவு செய்து வருகிறார் பாலாஜி. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் ராஜமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

பாலாஜி

புகார் கொடுத்த பெண் கொடுத்த தகவலின்படி சைபர்க்ரைம் போலீஸாரின் உதவியோடு அந்த சமூகவலைதளங்களின் கணக்குகளை ஆய்வு செய்தனர் ராஜமங்கலம் போலீஸார். அப்போது பாலாஜிதான் அந்தப் பெண்ணின் பெயரில் போலி சமூகவலைதள கணக்குகளை உருவாக்கியது தெரிந்தது.

இதையடுத்து பாலாஜியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அந்தப் பெண்ணை தான் காதலித்தாகவும் ஆனால் அவர் தன்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால்தான் ஆத்திரத்தில் அந்தப் பெண்ணை பழிவாங்க இப்படி செய்துவிட்டதாக பாலாஜி தெரிவித்தார்.

இதையடுத்து நீச்சல் பயிற்சியாளர் பாலாஜியை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஐபோன் உள்பட 3 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது
கைது

இதுகுறித்து ராஜமங்கலம் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட பாலாஜி, நீச்சல் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அந்தவகையில்தான் புகார் கொடுத்த பெண்ணிடம் பாலாஜி பழகியிருக்கிறார்.

தன்னுடைய காதலை பாலாஜி அந்தப் பெண்ணிடம் வெளிப்படுத்தியதும் அவர் அதை ஏற்கவில்லை. அதனால் அந்தப் பெண்ணை பழிவாங்க திட்டமிட்ட பாலாஜி, அந்தப் பெண்ணின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூகவலைதள கணக்குகளைத் தொடங்கி அதில் ஆபாசமாக பதிவு செய்திருக்கிறார். அதோடு அந்தப் பெண்ணின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அதில் பதிவு செய்திருக்கிறார். அதைப்பார்த்த சிலர் அந்தப் பெண்ணுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதன்பிறகே எங்களிடம் அந்தப் பெண் புகாரளித்தார். தற்போது பாலாஜியை கைது செய்திருக்கிறோம். அவரின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

குன்னூர்: வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் - சிக்கியது எப்படி?

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் தடை ஏதுமின்றி விற்பனை நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து இந்த இரண்டு மாநிலங்களுக்கும் கட்டுப... மேலும் பார்க்க

கேரளா: கோயில் வளாகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்; தட்டிக் கேட்ட சிறுவனைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த காட்டாக்கடை அருகே உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷீபா கேரளா தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலையில் முகம் சிதைந்து சடலமாகக் கிடந்த காவலாளி; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குகன்பாறையில் தாயில்பட்டியைச் சேர்ந்த கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த பட்டாசு ஆலையில், இரவு நேரக் காவலாளியாகத் தூத்துக்குடி... மேலும் பார்க்க

கோவை: தன் வீட்டருகே விளையாடியதால் கோபம்; சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண்; நடந்தது என்ன?

கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் அருகே அம்மன் குளம் பகுதி உள்ளது. அங்குத் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி கொலை வழக்கு - சரண்டரான கணவரின் முதல் மனைவி மகன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (45). திமுகவிலிருந்து பா.ஜ.க-விற்கு மாறிய இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பா.... மேலும் பார்க்க

கல்லூரி வளாகத்தில் டிரைவர் வெட்டிக் கொலை... போலீஸ் விசாரணை!

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். அதோடு ஆம்புலன்ஸ் டிரைவராகவும் இருந்து வந்தார... மேலும் பார்க்க