அயர்லாந்து: ``இந்தியாவுக்கு திரும்பிப் போ'' - சிறுமியை தாக்கிய சிறுவர் கும்பல்; ...
சென்னை-திருச்சி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னை- திருச்சி விமானம் திடீா் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் புதன்கிழமை காலை 5.45-க்கு 73 பேருடன் புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியதும் விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தாா்.
இதையடுத்து விமானம் ஓடுபாதையில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தாா். பின்னா் இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
அங்கு விமானப் பொறியாளா்கள் விமானத்தின் தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்தனா். சுமாா் 1 மணி நேரத்துக்கு பின்னா் கோளாறு சரிசெய்யப்பட்டு காலை 6.45 மணிக்கு சென்னையிலிருந்து மீண்டும் திருச்சி புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.