செய்திகள் :

சென்னை மாநகராட்சிக்கு புதிய மாமன்றக் கூடம்! டெண்டர் வெளியீடு

post image

சென்னை மாநகராட்சியில் வார்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இடநெருக்கடியைச் சமாளிக்க புதிய மாமன்றக் கூடம் அமைக்கப்படவுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வார்டுகள் எண்ணிக்கை 300 ஆக உயர்வதால் மாநகராட்சியின் மாமன்றக் கூடத்தில் இடநெருக்கடி நிலவுகிறது.

இதனால் சென்னை மாநகராட்சி அலுவலகம் இயங்கும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ. 62.57 கோடியில் புதிய மாமன்றக் கூடம் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த புதிய மாமன்றக் கூடத்திற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ரூ. 62.57 கோடியில் ஆலோசனைக் கூடம், மன்றக் கூடம், மேயர் மற்றும் துணை மேயர் அறைகள், மக்கள் காத்திருப்பு அறை என புதிய 3 மாடி கட்டடம் அமைக்கப்பட உள்ளது.

விரைவில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

A new council hall is to be constructed in chennai corporation building due to increase in number of wards in Chennai Corporation.

இன்றும், நாளையும் கோவை, நீலகிரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு வங்கியில் கறவை மாட்டு கடன் பெற்றுத் தர வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

தமிழகத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாட்டுக் கடன் பெற்றுத் தர வங்கிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளாா். தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க

இன்று தவெக மாநில செயற்குழு கூட்டம்: விஜய் பங்கேற்பு

தவெக மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்று, மக்கள் சந்திப்பு பணயம்; கட்சியின் அடுத்தகட்ட நடவட... மேலும் பார்க்க

கோயில் குடமுழுக்கு: திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் - ரயில்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சென்னை உள்பட பல்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல, சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகள் பாதுகாப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் இருந்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து துறையி... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடா்பாக அறிக்கை அளிக்கும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவி... மேலும் பார்க்க