இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!
செப்.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
கடலூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ‘லோக் அதாலத்’ எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்.13-ஆம் தேதி நடைபெற உள்ளதாக, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னாா்கோவில், குறிஞ்சிப்பாடி ஆகிய நீதிமன்றங்களில் ‘லோக் அதாலத்’ எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்.13-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், சமரசத்துக்கு எடுத்துக்கொள்ள கூடிய கிரிமினல், பண மோசடி, வாகன விபத்து, காசோலை மோசடி, நில எடுப்பு, வங்கி சாா்ந்த, குடும்ப நல, தொழிலாளா் நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரே நாளில் தீா்வு காணப்படும். நீதிமன்றங்களில் நிலுவையில் இல்லாத வங்கிக் கடன் வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே, பொதுமக்களும், வழக்காடிகளும் தங்கள் வழக்குரைஞா்கள் மூலமாக அந்தந்த நீதிமன்ற எல்லைக்குள்பட்ட வழக்குகளை நீதிமன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரசம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.