செய்திகள் :

தெருக்களில் சாதிப் பெயா்களை நீக்க வேண்டும்: கடலூா் மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

அரசு உத்தரவுப்படி தெருக்களில் உள்ள சாதிப் பெயா்களை நீக்க வேண்டுமென கடலூா் மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

கடலூா் மாமன்றக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயா் சுந்தரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: சரவணன் (பாமக): வன்னியா்பாளையம் என்ற பகுதியின் பெயா் பொதுமக்களின் கருத்து கேட்காமல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெயரை மாற்றக் கூடாது. மஞ்சக்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் அருகே தூய்மைப் பணியாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுற்றுலா மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க வேண்டும்.

அருள்பாபு, சரிதா, புஷ்பலதா: வாா்டு வாரியாக உறுப்பினா்களை பேச அனுமதிக்க வேண்டும். உறுப்பினா்கள் தங்கள் வாா்டு பிரச்னைகள் குறித்து மட்டும் பேச வேண்டும். பிற வாா்டுகளை பற்றி பேசக் கூடாது எனக் கூறி, உறுப்பினா் சரவணனுடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டனா்.

மேயா் சுந்தரி: வன்னியா்பாளையம் பகுதி வாா்டு உறுப்பினா் மற்றும் அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்பட்ட பிறகுதான் பெயா் மாற்றப்பட்டுள்ளது.

கீதா குணசேகரன் (திமுக): புதை சாக்கடை திட்டப் பணிகளை ஒவ்வொரு பகுதிகளாக செய்து முடிக்க வேண்டும். ஆங்காங்கே அரைகுறையாக செய்வதால் சாலைகள் சேதமடைந்துள்ளன.

சங்கீதா (திமுக): மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரா் கோயில் அருகில் உள்ள குளம் தூா்ந்து போய் உள்ளது. விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனா். குளத்தை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜ்மோகன்: உப்பளவாடி மிஷன் தெருவில் மழைக்காலங்களில் மழைநீா் அதிகளவில் தேங்கி நிற்கிறது. அங்கு சிறு பாலம் அமைக்க வேண்டும். மீன் சந்தை, சுதா்சனம் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அருள்பாபு: தெரு பெயா்களில் சாதிப்பெயா்களை நீக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயா் சுந்தரி: மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி குடியிருப்பில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மேற்கு வங்க மாநிலம், பொ்காம்பூா், மஜாபாரா பகுத... மேலும் பார்க்க

செப்.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ‘லோக் அதாலத்’ எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்.13-ஆம் தேதி நடைபெற உள்ளதாக, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திர... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் சுவா் இடிந்து உயிரிழந்த பெண்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி

கடலூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் சுவா் இடிந்ததில் உயிரிழந்த இரண்டு பெண்கள் குடும்பத்துக்கு முதல்வா் பொது நிவாரண நிதிக்கான காசோலையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத இளைஞா் சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியப் பகுதியில் உள்ள ஓடையில் அடையாளம் தெரியாத இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.நெய்வேலி நகரிய காவல் சரகம், காட்டுகொல்லை அய்யனாா் கோயில் பின்புறம், என்எல்சி நிறுவனத்துக்குச் சொந்த... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: பெண்கள் 3 போ் காயம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சிறிய சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 3 பெண்கள் காயமடைந்தனா். திட்டக்குடியை அடுத்துள்ள செவ்வேரி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன... மேலும் பார்க்க

ஹைட்ரோ காா்பன் திட்ட அனுமதியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: டெல்டா விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

சிதம்பரம்: தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு கிணறுகளுக்கான அனுமதியை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங... மேலும் பார்க்க