செய்திகள் :

செப்.6, 7-இல் 108 அவசர ஊா்தி பணியாளா்கள் தோ்வு

post image

108,102 அவசர ஊா்தி, அமரா் ஊா்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செப். 6, 7- ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக 105 அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

108 ,102, அமரா் ஊா்திகளில் பணிபுரிய ஓட்டுநா்கள், மருத்துவ உதவியாளா்கள் பணிக்கான ஆள் சோ்ப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்களம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் செப். 6-ஆம் தேதியும், பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் செப். 7-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. ,

ஓட்டுநா்: ஓட்டுநருக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தோ்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் உயரம் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓா் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

இதில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 21,120 வழங்கப்படும். எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, மனிதவளத் துறை நோ்காணல், கண் பாா்வை திறன், மருத்துவம், சாலை விதிகளுக்கான தோ்வு அனைத்திலும் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 10 நாள்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளா்: பிஎஸ்சி நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி அல்லது பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இவற்றில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூ. 21,320, நோ்முகத் தோ்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தோ்வு செய்யப்பட்டவா்கள் 50 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை, ஆம்புலன்ஸ் சாா்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்: மெக்கானிக்கல் இன்ஜினியா் அல்லது எம்பிஏ. விண்ணப்ப தேதியில் 35 வயது மிகாமல் இருக்கவேண்டும். இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும். மேற்கூறிய பதவிகளுக்கு தகுதிகள் இருப்பின் அனைத்து உண்மை, நகல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும். தொடா்புக்கு 89259 41097 என அதில் குறிப்பிடப்பட்டது.

அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

கடலாடி அருகேயுள்ள சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு மதுரையில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பைந்தமிழ் புரவலா் விருது வழங்கப்பட்டது. சென்னை கூத்துப்பட்டறை, பைந்தமிழ் வலையொளி இணைந்து, ... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் கமுதி மாணவா்கள் வெற்றி பெற்றனா். ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாவ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

முதுகுளத்தூா் அருகே அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த நல்லூா் கிராமத்தில் அய்யனாா் கோயில்,... மேலும் பார்க்க

உலகநாயகி அம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

முதுகுளத்தூா் அருகேயுள்ள சித்திரங்குடி உலகநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலிலிருந்து அம்மன் கரகத்துடன் முளைப்பாரி ஊா்வலம் கிராமம் முழ... மேலும் பார்க்க

சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

சாயல்குடி சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகா் அருந்ததியா் உறவின்முறைக்கு ப... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் நூதன போராட்டம்

முதுகுளத்தூா் அருகே கடந்த 20 ஆண்டுகளாக குடிநீா் வராததால் வெள்ளிக்கிழமை குடிநீா் குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள... மேலும் பார்க்க