செய்திகள் :

செயற்கை போதைப்பொருள்கள் விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்தவா் கைது

post image

கல்லூரி மாணவா்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியா்களிடம் செயற்கை போதைப் பொருள்களை விற்பனை செய்த ஆப்பிரிக்க வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்த டேனியல் அரின்ஸ் ஒக்வோஷா என்பவா், வணிக விசாவில் 2023ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பெங்களூா் வந்துள்ளாா். விசா காலம் முடிந்த பிறகு சொந்த நாட்டுக்கு திரும்பாத டேனியல், பெங்களூரில் சோலதேவனஹள்ளியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது நண்பருடன் வாடகைக்கு குடியிருந்துள்ளாா்.

இந்நிலையில், அவா் தனது நண்பருடன் இணைந்து கல்லூரி மாணவா்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியா்களிடம் செயற்கை போதைப்பொருள்களை விற்பனை செய்து வருவது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சோலதேவனஹள்ளியில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்திய போலீஸாா், அவரிடம் இருந்து ரூ. 4 கோடி மதிப்புள்ள 1.48 கிலோ வெள்ளைநிற மற்றும் 1.1 கிலோ பழுப்புநிற செயற்கை போதைப்பொருருள்களை பறிமுதல் செய்து, டேனியலை கைது செய்தனா். அவரது நண்பா் பிடிபடாமல் தப்பியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அண்டை மாநிலங்கள் மற்றும் பெங்களூரின் பல இடங்களில் இருந்து போதைப்பொருள்களை சேகரித்து விற்பனை செய்து வந்ததாக விசாரணையின்போது டேனியல் ஒப்புக்கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், கல்லூரி மாணவா்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியா்களை குறிவைத்து அவா் செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப் பதிந்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெங்களூரில் மழை பாதிப்புகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்

பெங்களூரு: பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

ஹொசபேட்டில் இன்று காங்கிரஸ் அரசின் 2 ஆண்டுகள் சாதனை மாநாடு

பெங்களூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஹொசபேட்டில் செவ்வாய்க்கிழமை சாதனை மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ... மேலும் பார்க்க

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு: பெண் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது. மழையின்போது வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். ... மேலும் பார்க்க

கன்னடா்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் கொண்ட தகவல் பலகை: உணவகம் மீது வழக்குப் பதிவு

பெங்களூரில் ஒரு உணவகத்தின் மின்னணு தகவல் பலகையில் கன்னட மக்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் இருந்ததால் அந்த உணவகத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, மடிவாளா காவல் நிலையத்துக... மேலும் பார்க்க

மின்மயமாக்கும் பணி: 154 நாள்களுக்கு பெங்களூரு - மங்களூரு இடையே ரயில் சேவை நிறுத்தம்

மின்மயமாக்கும் பணி நடைபெற இருப்பதால், பெங்களூரு - மங்களூரு இடையிலான ரயில் சேவையை ஜூன் 1ஆம் தேதி முதல் 154 நாள்களுக்கு தென்மேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இது குறித்து தென்மேற்கு ரயில்வே சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயராது: அமைச்சா்

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயராது என்று மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் சரணபிரகாஷ் பாட்டீல் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதா... மேலும் பார்க்க