செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் ஒரே நாளில் 3 குழந்தைகள் மீட்பு
சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 3 குழந்தைகளை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் திங்கள்கிழமை மீட்டனா்.
சென்னை செயின்ட் தாமஸ் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) ரயிலில் இருந்து 2 வயது ஆண் குழந்தை இறக்கிவிடப்பட்டது. ரயில் சென்ற நிலையில், ஆதரவின்றி தவித்த குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளா் சஞ்சீவிராஜா மீட்டு ஆலந்தூா் குழந்தைகள் காப்பகத்தில் சோ்த்தாா். மேலும், குழந்தையை ரயிலில் இருந்து இறக்கிவிட்டுச்சென்ற இளைஞரை அடையாளம் காணும் முயற்சியில் பாதுகாப்புப் பிரிவினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், அதே ரயில் நிலையத்தில் மின் ரயில்களில் இருந்து திங்கள்கிழமை இறக்கிவிடப்பட்ட மூன்றரை வயதுள்ள ஆண் குழந்தை மற்றும் 4 வயதுள்ள 2 பெண் குழந்தைகள் தனியாகத் தவித்தன.
அந்தக் குழந்தைகளை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா், எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சோ்த்தனா். மேலும், குழந்தைகளை கைவிட்டுச் சென்றவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.