செய்திகள் :

செருப்பால் அடித்த டெக்னீஷியன்; வெளுத்து வாங்கிய தூய்மை பணியாளர்கள்! - மருத்துவமனையில் நடந்தது என்ன?

post image

அருப்புக்கோட்டையில் துப்புரவு பணியாளரை மருத்துவமனை‌ ஊழியர் செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீசியனாக பணிபுரிந்து வருபவர் ராஜ். எக்ஸ்ரே அறையை சுழற்சி முறையில் தினமும் ஒரு தூய்மை பணியாளர் சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி இன்று, எக்ஸ்ரே அறையை உமா மகேஸ்வரி எனும் துப்புரவு பணியாளர் சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

உமா மகேஸ்வரி

அப்போது லேப் டெக்னீசியன் ராஜுக்கும், துப்புரவு பணியாளர் உமா மகேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜ், தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி, உமா மகேஸ்வரியை கையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வலி தாங்க முடியாமல் உமா மகேஸ்வரி அழுதுள்ளார்.

இந்த சத்தம்கேட்டு வந்த சக துப்புரவு பணியாளர்கள் லேப் டெக்னீசியன் ராஜுக்கு எதிராக மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த மருத்துவ அலுவலர்கள், ராஜை அழைத்து விசாரணை நடத்தியதோடு அவரின் நடத்தையை கண்டித்தனர். மேலும், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து ராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் மருத்துவ அலுவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ராஜ்

இந்தநிலையில், திடீர் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதில் துப்புரவு பணியாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து லேப் டெக்னீசியன் ராஜை சரமாரியாக தாக்கினர்.

இதையடுத்து, இருதரப்பினரையும் சமாதானப்படுத்திய மருத்துவ அலுவலர்கள், ராஜை மீட்டு முதலுதவிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என கூறினர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ரயில் தண்டவாளத்தில் தண்டால்; சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோ- இளைஞரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே தாமரை குட்டி விளைபகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்ட... மேலும் பார்க்க

`பணம் திருடியதாக சந்தேகம்’ வேதனையில் 4வது மாடியில் இருந்து விபரீத முடிவெடுத்த கோவை மாணவி

கோவை நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் மருத்துவமனை இயங்கி வருகிறது. அவர்களுக்கு சொந்தமாக பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியும் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு திருவண்... மேலும் பார்க்க

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க

இன்ஸ்டா வீடியோவில் காதல்; துப்பட்டாவால் கொலை செய்யப்பட்ட கணவன் - ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானாவில் உள்ள பிரேம் நகரில் வசிப்பவர் ரவீனா(32). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிட ... மேலும் பார்க்க

Ooty: அனுமதியோ 40 மரங்களுக்கு, வெட்டிக் கடத்தப்பட்டதோ 250 மரங்கள்! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் பேரூராட்சி உட்பட்ட மணிக்கல் பகுதியில் அமைந்திருக்கிறது கழிவு மேலாண்மை கூடம். நீலகிரி தைல மரங்கள் எனப்படும் யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் நாள்தோ... மேலும் பார்க்க