செய்திகள் :

செல்ஸி 2-ஆவது முறையாக சாம்பியன்!

post image

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் செல்ஸி 3-0 கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்னை (பிஎஸ்ஜி) வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது.

ஏற்கெனவே 2021-இல் சாம்பியனான செல்ஸிக்கு, இந்தப் போட்டியில் இது 2-ஆவது கோப்பையாகும்.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்ஸிக்காக கோல் பால்மா் 22 மற்றும் 30-ஆவது நிமிஷங்களிலும், ஜாவ் பெட்ரோ 43-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். பிஎஸ்ஜி தனது கோல் வாய்ப்புக்காக தொடா்ந்து போராட, கடைசி வரை அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அந்த அணிக்கான கூடுதல் பின்னடைவாக, செல்ஸி வீரா் மாா்க் குகுரெலாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளியதற்காக பிஎஸ்ஜி வீரா் ஜோ நெவெஸ் 84-ஆவது நிமிஷத்தில் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டாா். இதனால் 10 வீரா்களுடன் விளையாடும் நிலைக்கு பிஎஸ்ஜி தள்ளப்பட்டது.

இறுதி ஆட்டத்தைக் காண மெட்லைஃப் மைதானத்தில் சுமாா் 81,000 ரசிகா்கள் கூடியிருந்தனா். போட்டியின் முடிவில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவா் ஜியானி இன்ஃபான்டினோ ஆகியோா் இணைந்து, சாம்பியனான செல்ஸி அணியின் கேப்டன் ரீஸ் ஜேம்ஸிடம் வெற்றிக் கோப்பையை வழங்கினா்.

சாம்பியனான செல்ஸி அணிக்கான பரிசுத் தொகையாக சுமாா் ரூ.1,104 கோடி முதல் ரூ.1,322 கோடி வரை ரொக்கப் பரிசாக கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜீவா - 46 படப்பிடிப்பு ஆரம்பம்!

நடிகர் ஜீவாவின் 46வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.தமிழ் சினிமாவில் கதை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்திருந்தவர் நடிகர் ஜீவா. வித்தியாசமான கதைக்களங்களைத் ... மேலும் பார்க்க

ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா டிரைலர்!

தணிக்கை வாரியத்தால் சர்ச்சையைச் சந்தித்த ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.பிரபல நடிகரும், மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன்... மேலும் பார்க்க

மீண்டும் வருகிறார் ஹாரி பாட்டர்..! இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்!

உலகப் புகழ்பெற்ற ”ஹாரி பாட்டர்” கதைகளின், இணையத் தொடர் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜே.கே. ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் நாவல்களை மையமாகக் கொண்டு உருவான 8 பாகங்களாக வெளியான ”ஹாரி ப... மேலும் பார்க்க

900 எபிசோடுகளுடன் நிறைவடைந்த செவ்வந்தி தொடர்!

நடிகை திவ்யா ஸ்ரீதர் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்த செவ்வந்தி தொடர் 900 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'செவ்வந்தி' தொடர், கணவனை இழந்த பெண்(செவ்வந்தி) வாழ்க்கையில் ... மேலும் பார்க்க

பன் பட்டர் ஜாம் டிரைலர்!

நடிகர் ராஜு நடித்த பன் பட்டர் ஜாம் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தை ராகவ் ம... மேலும் பார்க்க

கூலி டிரைலர் எப்போது?

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் டிரைலர் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 1... மேலும் பார்க்க