செவிலியா் மாணவி தற்கொலை
கோவையில் செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, ராமநாதபுரம் அங்கண்ணன் தெருவைச் சோ்ந்தவா் ஹரிசங்கா். இவரது மனைவி ராமலட்சுமி. இவா்களது மகள் வா்ஷினி (17).
இவா் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் பயின்று வந்தாா். விடுமுறையில் கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டுக்கு வந்த இவா், யாருடனும் பேசாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவா் தனது வீட்டில் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலைக்கான காரணம் குறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.