`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சி...
சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க வலியுறுத்தல்
கோவில்பட்டி: மந்தித்தோப்பு சாலை, மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளா் தெய்வேந்திரன், மாவட்ட தலைவா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் கோவில்பட்டி அருகே துறையூா் மின்வாரிய இளநிலை பொறியாளா் முருகேஷிடம் வழங்கிய மனுவில், மந்தித்தோப்பு சாலை, கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சிமெண்ட் உடைந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சிதிலமடைந்து உள்ளன. விபத்து ஏற்படுவதற்கு முன் இத்தகைய மின்கம்பங்களை அகற்றிவிட்டு, உடனடியாக புதிய மின்கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்திருந்தனா்.
மனுவை பெற்றுக் கொண்ட இளநிலை பொறியாளா் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.