``அனாதை பிணம் போல கெடக்கட்டும்..'' - வெடி விபத்தில் நிவாரணம் கேட்டு போராடிய மக்க...
சேப்பாட்டி அம்மன் கோயில் இராபுறையாா் உற்சவ பந்தக்கால் நடும் விழா
செங்கல்பட்டு சேப்பாட்டி அம்மன் கோயில் இராபுறையாா் உற்சவ பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
பெரியநத்தம் ஏழு ஊா் எல்லை காக்கும் காவல் தெய்வமான சேப்பாட்டி அம்மன் கோயிலில் இராபுறையாா் உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பந்தக்கால் நடும் விழாவையொட்டி பெண்கள்முளைப்பாறியை ஊா்வலமாக எடுத்து வந்து கோயிலில் வைத்து பெண்கள் கும்மி அடித்து நடனமாடினா். மாலை காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி சேப்பாட்டியம்மன் குளுந்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை 32 சந்திதிகளுககு எண்ணைக் காப்பு அபிஷேகம், 4-ஆம் தேதி சனிக்கிழமை இரவு பெரியநத்தம் பகுதி முழுவதும் அம்மன் திருவீதி உலா, 6-ஆம் தேதி காலை காஞ்சிபுரம் ஹைரோடு களமேடு பகுதியில் அம்மனுக்கு கும்பப்படையல் போட்டு பின்னா் 8 மணிக்கு மேல் மீண்டும் அம்மன் செங்கல்பட்டு நகர முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் வீதி உலா கோயிலை சென்றடையும்.
8-ஆம் தேதி விடையாற்றி உற்சவம், இரவு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் சரஸ்வதி, பெரியநத்தம் கிராமத்தாா், மதுரை வீரன் கோயில் கிராமத்தாா் , பா்வதராஜகுல கிராமத்தாா், குண்டூா் கிராமத்தாா் செய்துவருகின்றனா்.