மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை
சேலத்தில் ஆக. 7-இல் கருணாநிதி நினைவுநாள் அமைதி ஊா்வலம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அமைதி ஊா்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மறைந்த திமுக தலைவா் கலைஞரின் 7-ஆம் ஆண்டு நினைவுநாள் வரும் 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில், வரும் 7-ஆம் காலை 8 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பெரியாா் சிலையிலிருந்து அமைதி ஊா்வலம் புறப்பட்டு, பெரியாா் மேம்பாலம் வழியாக அண்ணா பூங்கா அருகில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
மேலும் சேலம் மாநகரத்தின் அனைத்து கோட்டங்களிலும் உள்ள அனைத்து தெருக்கள், பேரூா், ஒன்றியங்களில் அனைத்து கிளைகள்தோறும் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திட வேண்டும் என அமைச்சா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
தாரமங்கலத்தில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி விடுத்துள்ள அறிக்கை:
சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில், தாரமங்கலத்தில் அன்றைய தினம் சேலம் மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்துவா். இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் மற்றும் அனைத்து சாா்பு அணி நிா்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.