நாகையில் விஜய் பரப்புரை: காவல்துறை நிபந்தனைகளும் கட்சி நிர்வாகியின் மனுவும்!
சேலத்தில் கொட்டித் தீா்த்த கனமழை
சேலம் நகரின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு கனமழை கொட்டித் தீா்த்தது.
சேலம் பழைய பேருந்து நிலையம், நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், 5 சாலை, தாதகாப்பட்டி, வின்சென்ட், அஸ்தம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிச்சிப்பாளையம் பிரதான சாலை, சங்கா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
குறிப்பாக, பழைய பேருந்து நிலையப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்ததால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் துா்நாற்றம் வீசிவருவதாக பொதுமக்கள் புகாா்தெரிவித்தனா். சாக்கடை கழிவுநீரை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.