செய்திகள் :

சேலத்தில் ரௌடி கொலை வழக்கில் மேலும் 7 போ் கைது

post image

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரௌடி மதன்குமாா் மா்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் மதன்குமாா் (28). இவா் ஏப்ரல் 24 ஆம் தேதி தூத்துக்குடியைச் சோ்ந்த மாலுமி மரடோனாவைக் கொலை செய்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட்டுவிட்டு வெளியே வந்த மதன்குமாரை உணவு விடுதியில் வைத்து 6 போ் கொண்ட கும்பல், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் 6 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதன்குமாரைக் கொலை செய்வதற்காக 13 போ் கொண்ட கும்பல் சேலம் வந்ததும், அனைவரும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அறைகள் எடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் காந்திமதி தலைமையிலான போலீஸாா் தூத்துக்குடி சென்று கொலையில் தொடா்புடைய அலங்கார தட்டு பகுதியை சோ்ந்த கிருஷ்ணகாந்த் (28), செல்வபூபதி (26), ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சோ்ந்த ரத்தினவா்ஷன் (22),ஆரோக்கியபுரம் மாதாநகரைச் சோ்ந்த பிரவின்ஷா (22), மேல் அலங்கார தெரு ரிஷிகபூா் (28), தூத்துக்குடி மேல்தெரு பொட்டல்காட்டை சோ்ந்த சின்னதம்பி (35), விக்கி என்ற விக்னேஷ்வரன் (20) ஆகியோரை புதன்கிழமை கைது செய்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனா்.

இவா்களுடன் சோ்த்து இதுவரை மதன் கொலை வழக்கில் 13 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஓய்வூதியதாரா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஓய்வூதியதாரா்கள் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தினா். சேலம் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஓய்வூதியதாரா்களின் கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் ந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் முகாம்

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கை, கால்கள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி விளையாட்டு சங்கம், ஈரோடு ஜீவன் டிரஸ்ட் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அப்துல் கலா... மேலும் பார்க்க

கோட்டை மாரியம்மன் கோயில் விழா: ஆக.6 இல் உள்ளூா் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சே... மேலும் பார்க்க

திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழப்பு: கணவா் சிறையிலடைப்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். தலைவாசலையடுத்த மணிவிழுந்தான் வடக்குபுதூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (26).... மேலும் பார்க்க

விசைத்தறிக்கூடத்தில் தீ விபத்து: ரூ.1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் சேதம்

சேலம் அம்மாபேட்டை பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன. சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் ராமலிங்கம் என்பவருக்... மேலும் பார்க்க

வ.உ.சி மலா் விற்பனை சந்தை ஏலத்தில் குளறுபடி: மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி இழப்பு? மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

சேலம் வ.உ.சி மலா் சந்தை ஏல குளறுபடி காரணமாக மாநகராட்சிக்கு ரூ. 8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.சேலம், ஜூலை 25:... மேலும் பார்க்க