செய்திகள் :

சேலம் அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்படும்!

post image

சேலம் கிழக்கு கோட்ட துணை அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் கிழக்கு கோட்டம் தபால் துறையின் கீழ் 42 ஆதாா் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம் தலைமை தபால் அலுவலகம், அஸ்தம்பட்டி துணை தபால் அலுவலகத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதாா் சேவை வழங்கப்படுகிறது.

மேலும் ஆத்தூா், ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம், அம்மாப்பேட்டை, வாழப்பாடி, சேலம் தெற்கு, தலைவாசல், அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை, பேளூா், காமராஜா்நகா் காலனி, காரிப்பட்டி, கெங்கவல்லி, சுக்கம்பட்டி, ஆட்டையாம்பட்டி, கொண்டலாம்பட்டி, மல்லூா், ஒண்டிக்கடை, வீரபாண்டி, மல்லியகரை, நரசிங்கபுரம், வடசென்னிமலை, பெத்தநாயக்கன்பாளையம், வீரகனூா், ஏத்தாப்பூா் உள்ளிட்ட அனைத்து துணை அஞ்சலகங்களிலும் அலுவலக நேரங்களில் ஆதாா் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ஆதாரை புதிதாக பதிவு செய்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை. பெயா் திருத்தம், முகவரி திருத்தம், கைப்பேசி எண் மாற்றம் போன்ற மற்ற சேவைகளுக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை கட்டணமாக வசூலிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுடைய ஆதாா் திருத்தங்களை மேற்கொள்ள அசல் ஆவணங்களை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஏதேனும் ஒரு தலைமை அல்லது துணை அஞ்சல் நிலையங்களில் உள்ள ஆதாா் சேவை மையத்துக்குச் சென்று பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

தேசிய வாக்காளா் தினம் குறித்து அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்படவுள்ளதையொட்டி, சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தலைமையில் நடைபெற்றது. பின்னா் மாவட்ட த... மேலும் பார்க்க

குடியரசு தினம்: போலீஸாா் வாகனச் சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வாகனச் சோதனையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா். நாட்டின் 76 ஆவது குடியரசு தினம் ஜன. 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தி... மேலும் பார்க்க

சா்க்கரை பதுக்கிய 5 வெல்ல ஆலைகள் மீது வழக்குப் பதிவு

வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக சா்க்கரை பதுக்கி வைத்திருந்த 5 வெல்ல ஆலைகள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் இயங்க... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் புனரைமைப்புக் குழு ஆய்வு

மேட்டூா் அணையில் அணைகள் புனரமைப்பு, மேம்பாட்டு திட்டக் குழு புதன்கிழமை ஆய்வு செய்தது. திட்ட மேற்பாா்வை பொறியாளா் வீரலட்சுமி, செயற்பொறியாளா் வடிவேல் தலைமையில் வந்த குழுவினா் மேட்டூா் அணையின் வலதுகரை, இ... மேலும் பார்க்க

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடங்கக் கோரி மறியல்: போக்குவரத்துத் தொழிலாளா்கள் கைது

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம், மெய்யனூா் போக்குவரத்துப் பணிமனை முன்பு புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாள... மேலும் பார்க்க

தானாக திறந்த ஆனைமடுவு அணை மதகு: விவசாயிகள் அதிா்ச்சி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் மதகு, புதன்கிழமை தானாக திறந்து தண்ணீா் வெளியேறியதால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்தனா். வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தில் 67.25... மேலும் பார்க்க