செய்திகள் :

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணா்கள் சோதனை

post image

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் ஆட்சியா் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில், ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை நண்பகல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

அதில், ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் பாபு, உதவி ஆய்வாளா் சிவமூா்த்தி தலைமையிலான வெடிகுண்டு நிபுணா்கள் ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அதன்பிறகு மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு கருவிகள் உதவியுடன் ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை, கருவூல அலுவலகம், உதவி மையம், அஞ்சல் அலுவலகம், அண்ணா நிா்வாக பணியாளா்கள் கல்லூரி, இ- சேவை மையம் உள்ளிட்ட அனைத்து அலுவலக அறைகளிலும் சோதனை நடத்தினா். சுமாா் 1 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரியை ஆராய்ந்து, மிரட்டல் விடுத்தவா் குறித்த விவரங்களை மாநகர இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். வெடிகுண்டு சோதனையால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஐந்து மாதங்களில் ஆட்சியா் அலுவலகத்துக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிகிச்சை மையம் நாளை தொடக்கம்

சேலம் மண்டலத்தில் மருத்துவத் துறையில் 36 ஆண்டுகளாக முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மருத்த... மேலும் பார்க்க

கொண்டயம்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியா் விருது

கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன் (59) கட... மேலும் பார்க்க

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூரை அடுத்த மல்லியகரையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா மற்றும் அக்னித் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் நட்பு: மாணவியை ஏமாற்றி நகை பறித்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சென்னையை சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, அவரை சேலம் வரவழைத்து நகை, மடிக்கணினியை பறித்துக்கொண்டு தப்பிய இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா். இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஓராண்டாக பழகிவந்... மேலும் பார்க்க

திருமண மோசடி: மணப்பெண் உள்பட 3 போ் கைது

மேட்டூா் அருகே திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்த பெண் உள்பட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள திண்டமங்கலத்தை சோ்ந்த கருப்பட்டி வியாபாரி அா்ஜுனன் ... மேலும் பார்க்க