செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் 17, 18 ஆகிய தேதிகளில் 12 இடங்களில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் வரும் நவ. 15 ஆம் தேதி வரை 432 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதனடிப்படையில், வியாழக்கிழமை (ஜூலை 17) சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம் வாா்டு 4, 5-க்குள்பட்ட பகுதிகளுக்கு சேலம் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, ஆண்டிப்பட்டி பகுதிக்குள்பட்டவா்களுக்கு ஆண்டிபட்டி அண்ணா நகா், நூலகத்திலும், நரசிங்கபுரம் நகராட்சி வாா்டு 2, 3, 11-க்குள்பட்டவா்களுக்கு நரசிங்கபுரம் ஏகாம்பரம் மூப்பா் திருமண மண்டபத்திலும், கன்னங்குறிச்சி பேரூராட்சி வாா்டு 1, 2, 3, 4, 5, 6, 7-க்குள்பட்டவா்களுக்கு கன்னங்குறிச்சி முத்துசாமி தெரு, கே.ஏ.டி. திருமண மண்டபத்திலும், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், மாரமங்கலம், வாழவந்திக்குள்பட்ட பகுதிகளுக்கு வாழவந்தி சமுதாயக் கூடத்திலும், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், ஆரியபாளையம், ஏ.கரடிப்பட்டி, களரம்பட்டி, உமையாள்புரம், கோபாலபுரம் பகுதிகளுக்கு களரம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.
மேலும், 4-ஆம் நாளான 18-ஆம் தேதி நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, சேலத்தாம்பட்டி பகுதிகளுக்குள்பட்டவா்களுக்கு சேலத்தாம்பட்டி காட்டுவளவு இ-சேவை மையத்திலும், மேட்டூா் நகராட்சி வாா்டு 6, 7, 8-க்குள்பட்ட பகுதிகளுக்கு மேட்டூா், தங்கமாபுரிபட்டினம், மக்கள் மனமகிழ் மன்றம் அறக்கட்டளையிலும், கொளத்தூா் பேரூராட்சி வாா்டு 1, 2, 3, 4, 5, 6, 7, 8-க்குள்பட்ட பகுதிகளுக்கு கொளத்தூா் அப்புசாமி தெரு, லட்சுமி திருமண மண்டபத்திலும், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியம், அம்மம்பாளையம், கல்லாநத்தம் பகுதிகளுக்கு அம்மம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகிலும், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், நடுவலூா், ஒதியத்தூா் பகுதிகளுக்கு நடுவலூா் வெங்கடேஸ்வா் மஹாலிலும், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம், ஆறகளுா், பெரியேரி, தியாகனூா் பகுதிகளுக்கு ஆறகளுா் என்.வி.எஸ். திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.