பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவில் ‘இறுதிச் சடங்கு’: குஜராத் தொழிலதிபரின் வினோத ச...
சோனி இந்தியா வருவாய் 20.6% அதிகரிப்பு!
நுகர்வோர் மின்னணு தயாரிப்பாளரான சோனி இந்தியாவின் லாபம் 22.18 சதவிகிதம் உயர்ந்து ரூ.167 கோடியாகவும், அதன் செயல்பாட்டு வருவாய் 20.6 சதவிகிதம் அதிகரித்து ரூ.7,663.74 கோடியாகவும் உள்ளது என்று வணிக நுண்ணறிவு தளமான டோஃப்லர் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் தொழில்நுட்ப நிறுவனமான சோனி கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான சோனி இந்தியா, 2022-23ஆம் ஆண்டில் ரூ.136.67 கோடி லாபம் ஈட்டியது. அதே வேளையில் அதன் செயல்பாடுகளிலிருந்து அதன் வருவாய் ரூ.6,353.74 கோடியாக இருந்தது.
2023-24 ஆம் ஆண்டில் அதன் மொத்த செலவுகள் முந்தைய ஆண்டில் ரூ.6,225.87 கோடியிலிருந்து 20.5 சதவிகிதம் அதிகரித்து ரூ.7,502.30 கோடியாக உள்ளது.
இதையும் படிக்க: வங்கதேசத்திற்கான மின் விநியோகத்தை 60 சதவிகிதம் துண்டித்த அதானி பவர்!
சோனி இந்தியாவின், 'விளம்பரச் செலவுகள்' மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 37.6 சதவிகிதம் அதிகரித்து ரூ.179.02 கோடியாக இருந்தது. அதே வேளையில் அதன் தாய் நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட ராயல்டி 13.6% அதிகரித்து ரூ.259.07 கோடியாக உள்ளது.
நுகர்வோர் ஆடியோ மற்றும் விஷுவல்ஸ் மூலம் சோனி இந்தியாவின் வருவாய் 2024 நிதியாண்டில் 15.7% அதிகரித்து ரூ.6,300.20 கோடியாக இருந்தது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.5,445.73 கோடியாக இருந்தது. இந்தநிலையில், மற்ற வணிக நிறுவனங்களின் வருவாய் 50.16% உயர்ந்து ரூ.1,363.54 கோடியாக உள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக சோனி இந்தியாவுக்கு நான்காவது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.