செய்திகள் :

சோனி பிஎஸ் - 5 விற்பனை பாதிப்புக்கு ஜிடிஏ - 6 காரணமா?

post image

சோனி நிறுவனத்தின் தயாரிப்பான பிளே ஸ்டேசன் 5, விற்பனையில் தன்னிறைவடைந்துள்ளது.

முந்தைய தயாரிப்பான பிளே ஸ்டேசன் 4 ஐ ஒப்பிடும்போது சிறப்பான விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட விளம்பரப் பணிகளே விற்பனை அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் எனவும் சோனி குறிப்பிட்டுள்ளது.

எனினும், தற்போது சந்தையின் நிலைமை மாறிவருவதால், விற்பனையின் வேகத்தில் சற்று தளர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், விற்பனையின் அளவு குறைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த சோனி நிறுவனம் மின்னணு துறையில் நம்பகத்தன்மை வாய்ந்த தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேசன் இணைய விளையாட்டுப் பிரியர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.

கடந்த 2020 பிப்ரவரியில் வெளியான பிஎஸ் 5, உலகம் முழுவதும் 77.8 மில்லியன் (7.7 கோடி) விற்பனையாகியுள்ளது.

எனினும் உற்பத்தி சவால்கள், வரி விதிப்பு தாக்கம், வரையறுக்கப்பட்ட முதல் தரப்பு கேம் வெளியீடு போன்றவை சமீபகாலங்களாக பிஎஸ் 5 விற்பனைக்குத் தடையாக அமைந்துள்ளன.

அதோடு மட்டுமின்று கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 (ஜிடிஏ -6) ரிலீஸ் தாமதமும், சோனி பிஎஸ் 5 விற்பனையை பாதிக்கலாம் என்று தொழில் துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

சோனி நிறுவனம் தொடர்ந்து மென்பொருள் ஒத்துழைப்பு மற்றும் வன்பொருள் மேம்பாடுகளை அவ்வபோது அறிவித்துவந்தாலும், ஜிடிஏ -6 வெளியீடு தாமதமாகி வருவது விற்பனையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காலமாற்ற இடைவெளியை சோனி கையாள்வதைப் பொருத்து நடப்பு காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப மதிப்பு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | விவோ வி50 எலைட் இன்று அறிமுகம்! விற்பனையில் முற்றிலும் புதுமை!

சுவென் லைஃப் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சுவென் லைஃப், வருவாய் வெகுவாக சரிந்து, இழப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ரூ.2.4 கோடியாகயாக இருந்த வருவாய் அதன் 4-வது காலாண்டில் ரூ.1.5 கோடியாகக் குறை... மேலும் பார்க்க

ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட் நிகர இழப்பு ரூ.127 கோடி!

புதுதில்லி: ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட், 2025் மார்ச் காலாண்டில் தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் ரூ.126.99 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பை சந்தித்ததாக அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்தநிறுவ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் சரிந்து ரூ.85.50-ஆக முடிவு!

மும்பை: டாலர் தேவை காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்தது முடிந்தது. இருப்பினும், உள்நாட்டு சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட பலவீனம் ஆகியவை சரிவைத் தணித்தன. வங்கிகளுக்கு இட... மேலும் பார்க்க

ஏழு மாத உச்சத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 ஆக முடிவு!

இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சுமார் 1.5 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தன. சென்செக்ஸ் 1200.18 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 ஆகவும், நிஃப்டி-50 குறியீடு 394.20 புள்ளிகள் உய... மேலும் பார்க்க

விவோ வி50 எலைட் இன்று அறிமுகம்! விற்பனையில் முற்றிலும் புதுமை!

விவோ வி50 எலைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (மே 15) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஸ்மார்ட்போனுடன் புளூடூத் ஹெட்செட் வழங்கப்படுகிறது.தனித்துவமான வடிவம் ம... மேலும் பார்க்க

அக்ஸோ நோபல் 4-வது காலாண்டு லாபம் சரிவு!

புதுதில்லி: வண்ணப்பூச்சு மற்றும் பூச்சுகள் தயாரிப்பாளரான அக்ஸோ நோபல் இந்தியா லிமிடெட், மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.108.4 கோடியாக குறைந்துள்ளதாக அறி... மேலும் பார்க்க