ஒரு சிறுவன் கலைஞனாக உருவானத் தருணம்! - மிருதங்கம் அரங்கேற்ற கதை
'சோறு தண்ணீர் இல்லாமல் கட்சியை வளர்த்து எடுத்தவர் ராமதாஸ் ஐயா; அன்புமணிக்கு..!' - ஜி.கே மணி உருக்கம்
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று( ஜூலை 5) ஜி.கே மணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``எனக்கு முதுகுதண்டு பிரச்னை இருக்கிறது. அதற்காக சிகிச்சை எடுத்துகொண்டிருக்கிறேன். இத்தனை வருடங்களாக ராமதாஸ் ஐயாவுடன் கட்சியில் பயணம் செய்துவிட்டேன். இறுதிவரை பயணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்.
மன உளைச்சலில் இருக்கிறோம்
பாமகவில் இருக்கும் பிரச்சனையால் நான் மட்டுமின்றி எங்கள் கட்சியில் இருக்கும் அனைவரும் மன உளைச்சலில் இருக்கிறோம். வேதனையில் இருக்கிறோம். பழைய நிலைமைக்கு கட்சி திரும்ப வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். இதற்கு ஒரே தீர்வு, ராமதாஸும், அன்புமணியும் மனம் விட்டு பேச வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.

சோறு தண்ணீர் இல்லாமல் கட்சியை வளர்த்து எடுத்தவர் எங்கள் ராமதாஸ் ஐயா. அதேபோல அன்புமணிக்கு கட்சியில் முதலமைச்சர் பதவி கொடுத்து முன்னுரிமைப்படுத்தி இருக்கிறோம். அதனால் இரண்டு சக்திகளும் ஒன்றிணைந்தால் தான் மீண்டும் கட்சிக்கு வலிமையாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.