செய்திகள் :

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்

post image

சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம் செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சுமார் 1305 படிகள் கொண்ட பிரமாண்டமான மலை சோளிங்கர். இந்த மலையின் மீது கோயில் கொண்டிருக்கிறார் யோக லட்சுமி நரசிம்ம பெருமாள். இதையடுத்து 500 படிகளேறினால், சின்னஞ்சிறிய மலையில், ராமபக்த அனுமன், யோக ஆஞ்சநேயராகக் காட்சி தருகிறார்.

இதையும் படிக்க |எங்களுக்கு ஐயா ஐயாதான்: அன்புமணி விளக்கம்

யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் தரிசித்துவிட்டால், இதுவரை இருந்த தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் போகும். காரியம் யாவும் வீரியமாகும். மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் அகலும். இழந்த பொருளை, பிரிந்த உறவை, பதவியை, கெளரவத்தைத் திரும்பப் பெறுவது உறுதி என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

இந்த நிலையில், சோளிங்கர் வந்த நடிகர் ஜெயம் ரவி, பிரசித்தி பெற்ற யோக லட்சுமி நரசிம்ம பெருமாள் மலைக்கோவிலுக்கு படிகள் வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தார் .

பின்னர் ரோப் காரில் கீழே இறங்கி சிறிய மலை ஆஞ்சநேயர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது பொதுமக்கள் நடிகர் ஜெயம் ரவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.14 கன அடியாக சற்று குறைந்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 119.76 அடியில் இருந்து 119.14 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினா... மேலும் பார்க்க

நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் சனிக்கிழமை(ஜன.4) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.நடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாத... மேலும் பார்க்க

உ.பி: நேபாளத்துக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் கைது!

இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசத்தின் பஹ்ராய்ச் மாவட்டத்தில் இந்தியாவிலிருந்து நேபாள நாட்டிற்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக நேற்று (... மேலும் பார்க்க

காதலியை கவர சிங்கத்தின் கூண்டுக்குள் சென்ற காதலன் பலி! விடியோ வைரல்!

மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் காதலியை கவர சிங்கத்தின் குகைக்குள் சென்ற நபரை அதனுள் இருந்த சிங்கங்கள் தாக்கியதில் பலியாகியுள்ளார்.உஸ்பெகிஸ்தான் நாட்டின் தஷ்கெண்ட் மாகாணத்திலுள்ள பார்கெண்ட் நகரில் த... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஒருவர் கைது!

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் பழங்குடியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சியோனி மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வய... மேலும் பார்க்க