விநாயகா் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் சென்றார் பிரதமர் மோடி!
புது தில்லி: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் டோக்யோவில் இருந்து சென்டைக்கு புல்லட் ரயிலில் சென்றார்.
ஜப்பான் பிரதமர் இஷிபா, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் புல்லட் ரயிலில் சென்டைக்குப் புறப்பட்டேன். இரவு பயணம் தொடங்கியது. நானும் அவருடன் ஒரே பெட்டியில் பயணித்து வருகிறோம் என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
சென்டை வந்து சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் ரயில்வேயில், பயிற்சி பெற்று வரும் இந்திய ரயில் ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசினார்.