ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: மத்திய அரசு அறிவிப்புக்கு வரவேற்பு
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாரன் வெளியிட்ட அறிக்கை:
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.
அதன்படி, தற்போது ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது சமூக நீதி வரலாற்றில் முக்கியமானதாகும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் ஏற்றத்துக்கு ஜாதி வாரிக் கணக்கெடுப்பு பெரிதும் உதவும். ஆகவே, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வரவேற்கிறது.
அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.