செய்திகள் :

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு: நிர்மலா சீதாராமன்

post image

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது, ஜிஎஸ்டி வந்த பிறகு பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.

முன்பு இருந்த வரியே தற்போது ஜிஎஸ்டியிலும் உள்ளது.

ஜிஎஸ்டி தொடர்பான ஒவ்வொரு தீர்மானமும் அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் மேற்கொள்ளப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு திமுக உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது.

எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேடுவதை திமுக கைவிட வேண்டும்.

சாதிரீதியான பிரச்னை தமிழகத்தில் இன்றும் உள்ளது. தமிழகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு சாதிய கொடுமைகள் தமிழகத்தில் நடைபெறுகிறது.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சிப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது.

ஊழல் கூட்டணிக்காரர்கள் எங்கள் கூட்டணி பற்றி பேசினால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நாளை அக்னி நட்சத்திரம்: என்ன செய்யக் கூடாது? அரசு வழிகாட்டு நெறிமுறை

சென்னை: தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை க... மேலும் பார்க்க

சின்னசேலத்தில் தனியார் ஊதுவத்தி கம்பெனியில் திடீரென தீவிபத்து

சின்னசேலம் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் கம்பெனியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கூகையூர் சாலையில் பூண்டி எல்லையில் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் ... மேலும் பார்க்க

பத்திரிகை சுதந்திரம்: தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? முதல்வர் கேள்வி

உலக பத்திரிகை சுதந்திரம் தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவ... மேலும் பார்க்க

தேமுதிகவிலிருந்து ஒருபோதும் விலகமாட்டேன்: நல்லதம்பி

சென்னை: நான் தேமுதிகவிலிருந்து விலகுவதாக ஒருபோதும் கூறவில்லை என்று தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி விளக்கம் கொடுத்துள்ளார்.கட்சியிலிருந்து விலகுவதாக பொய்யான தகவலை பரப்பியுள... மேலும் பார்க்க

கத்திரி வெய்யில் குறித்து நல்ல செய்தி சொன்ன பிரதீப் ஜான்

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில நல்ல தகவல்களை வழங்கியுள்ள... மேலும் பார்க்க

மே 5, 6ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தில் ஒருபக்கம் வெய்யில் கொளுத்திவரும் நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு ... மேலும் பார்க்க