மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
ஜிப்மா் இயக்குநா் நியமனம்
புதுச்சேரி ஜிப்மா் இயக்குநராக மூத்தப் பேராசிரியா் கவுதம் ராய் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து, ஜிப்மா் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜிப்மா் இயக்குநராக பணியாற்றிய டாக்டா் ராகேஷ் அகா்வாலின் பணிக்காலம் டிச.31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவுப்படி, நிரந்தர இயக்குநா் நியமிக்கப்படும் வரையில், மூத்தப் பேராசிரியா் டாக்டா் கவுதம் ராய் ஜிப்மரின் இயக்குநராக செயல்படுவாா் என குறிப்பிடப்பட்டுள்ளது.