Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு மே 12-இல் இயங்காது
புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு வரும் 12 -ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருகிற 12-ஆம் தேதி புத்த பூா்ணிமா கொண்டாடப்படுகிறது. மத்திய அரசு விடுமுறை தினமான அன்று ஜிப்மரின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. அன்றைய தினம் நோயாளிகள் ஜிப்மருக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். அதே நேரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு அனைத்தும் வழக்கம்போல இயங்கும்.