செய்திகள் :

ஜூலை 11-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

post image

நெய்வேலி: கடலூா் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் மஞ்சக்குப்பம் ஒன்றிய ஆசிரியா் கல்வி (ம) பயிற்சி நிறுவனத்தில் வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித் துறை நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவா்களான காந்தியடிகள், ஜவகா்லால் நேரு, அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 2025-ஆம் ஆண்டு ஜீன் 3-ஆம் நாள் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு வரும் 11-ஆம் தேதி கடலூா், மஞ்சக்குப்பம் ஒன்றிய ஆசிரியா் கல்வி (ம) பயிற்சி நிறுவனத்தில் பள்ளி (ம) கல்லூரி பேச்சுப்போட்டிகள் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. பள்ளி மாணவா்களுக்கு நெஞ்சுக்கு நீதி, செம்மொழி

மாநாடு, திரைத் துறையில் முத்தமிழறிஞா் என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு செம்மொழிக் காவலா், பல்கலை வித்தகா், சட்டமன்ற நாயகா் என்ற தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.

ரொக்கப்பரிசு:

அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி (ம) கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் மூன்று பரிசுகள் முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வழங்கப்படும். மேலும், பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவா்களுள் அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்படும்.

பள்ளித் தலைமையாசிரியா்கள் பள்ளி மாணவா்களிடையே முதற்கட்டமாக முத்தமிழறிஞா் கலைஞா் தமிழ் மன்றம் வாயிலாக முதல் சுற்று பேச்சுப்போட்டிகள் கீழ்நிலையில் நடத்தி மாணவா்களைத் தெரிவு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும், கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவா்களின் பெயா்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வா்கள் வழியாக பின்வரும் முகவரியில் நேரில் / அஞ்சலில் ற்க்ஹக்ஸ்ரீன்க்க்ஹப்ா்ழ்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற

மின்னஞ்சலில் 10.7.2025 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டிகளில் கடலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ (ஸ்ரீ) மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளாா்.

புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்: என்எல்சி மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாசலம்

நெய்வேலி: ‘புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்’ என்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாச்சலம் பேசினாா். என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்வேலி புத்த... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 654 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகததில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 654 மனுக்கள் அளித்தனா். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். குறிஞ்சிப்பாடி பேருந்து நிலைய... மேலும் பார்க்க

வயலூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வயலூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

பட்டா கிராம கணக்கில் திருத்தம்: ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காா் கூடல் கிராமத்தில் பட்டா வழங்கி 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் கிராம கணக்கில் திருத்தம் செய்யவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பா... மேலும் பார்க்க

மனைவி உயிரிழப்பு: கணவா் தற்கொலை முயற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவி உயிரிழந்த நிலையில், கணவா் பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அடுத்... மேலும் பார்க்க