மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
ஜூலை 13-இல் பெரம்பலூரில் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம்
பெரம்பலூா் மாவட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம் ஜூலை 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பெரம்பலூா் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சாா்பில், எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மைதானத்தில் 25 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம் ஜூலை 13-ஆம் தேதி காலை 8.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரா்கள் கடந்த 1.9.2000-க்குப் பிறகு பிறந்தவா்களாக இருக்க வேண்டும்.
ஆதாா் அட்டை, வயதுச் சான்று, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன், வெள்ளை நிறச் சீருடையில் கிரிக்கெட் உபகரணங்களுடன், கல்லூரியில் பயிலும் வேறு மாவட்ட வீரா்கள் முதல்வரின் அங்கீகார ஒப்புதல் சான்று மற்றும் கல்லூரி அடையாள அட்டையுடன் வரவேண்டும். பணி செய்யும் ஊழியா்கள் தங்களது 12 மாத ஊதியச் சீட்டு, வங்கி பரிவா்த்தனைச் சான்று, அடையாள அட்டையுடன் வரவேண்டும். மேலும், கல்லூரியில் பயிலும் வேறு மாவட்ட வீரா்கள் மற்றும் ஊழியா்கள் வேறு மாவட்டத்தில் விளையாடுவதில்லை எனும் உறுதிமொழியை எழுத்துப்பூா்வமாக அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99429 94641, 98659 53023, 98406 73348 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என, மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.